Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இயக்குனராக அவதாரம் எடுக்கும் கிருத்திகா உதயநிதி.


உதயநிதி ஸ்டாலினின் மனைவியான கிருத்திகா உதயநிதி இயக்குனராக அவதாரம் எடுக்க இருக்கிறார்.ரெட் ஷியன்ட் நிறுவனத்திற்காக ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.

கல்லூரி நாட்களில் இருந்தே நான் கதை எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன், ஒருநாள் மிகப்பெரிய வர்த்தக ரீதியிலான படங்களை இயக்குவதே எனது குறிக்கோள்,அதேபோல் ஒரு சில என்னுடைய கருத்துக்களை படங்களின் கதைகளில் கடந்த காலங்களில் பயன்படுத்தியபோது உண்மையிலே அது வேலை செய்தது.

புதுமுக இயக்குனர்களை போல் அல்லாமல் ரெட் ஷியன்ட் நிறுவனத்திடம் என் கதையை சொல்லி, அவர்கள் சம்மத்தித்த பின்னரே இப்படத்தை எடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.என்னுடைய கணவருடைய தயாரிப்பு நிறுவனம் என்ற காரணம் மட்டுமில்லாமல் ,என்னுடைய கதையம்சம் பிடித்ததாலேயே இப்படத்தை நான் ரெட் ஷியன்ட் நிறுவனத்திற்காக இயக்கவுள்ளேன் என்று கூறினார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி.
[vuukle-powerbar-top]

Recent Post