Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அயல்கிரக வாசிகளோடு தொடர்பில் உள்ளவர் சொல்கிறார் - தமிழே உலகின் முதன் மொழி


அயல்கிரக வாசிகளோடு தொடர்பு உள்ளவர் சொல்கிறார் - தமிழே உலகின் 
முதன் மொழி.


ப்லேடியன் என்னும் அயல் கிரக வாசிகள் உலகத்தோடு பல காலமாக தொடர்பில் உள்ளனர் என்று அமெரிக்கர்கள் சிலர் நம்புகின்றனர். இவர்கள் நேரடியாக இந்த ப்லேடியன் என்னும் கிரக வாசிகளோடு தொடர்பில் உள்ளவர்கள் என்று அறிவித்துள்ளனர். 

உலகில் உள்ள பல விஞ்ஞான முன்னேற்றங்களுக்கு இந்த அயல் கிரக வாசிகள் தான் காரணம் என்று இந்தக் குழு நம்புகின்றது. மொழி, வரலாறு ஆகியவற்றை உலகிற்கு அறியப் படுத்தியது இந்த ப்லேடியன்கள் தான் என்று உறுதியாக கூறுகின்றனர் இந்த அமெரிக்கர்கள். 

மேலும் உலகில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களுக்கும் இந்த அயல் கிரக வாசிகள் தான் காரணம் என்று சொல்கின்றனர். உலகில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வும் இந்த ப்லேடியன்கள் சொல்கிறார்கள் என்று இந்த அமெரிக்கக் குழு சொல்கிறது. இந்த குழுவில் உள்ளவர்கள் நூல்கள் படிபதில்லை. ஆனால் ப்லேடியன்கள் உதவியுடன் பல தகவல்கள் அறியத் தந்துள்ளனர். பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கி உள்ளனர். இவர்கள் அயல்கிரக வாசிகளோடு தொடர்பு கொண்டு ஏராளமான தகவல்களை உலகிற்கு சொல்லி வருகின்றனர். 

அந்த வகையில் 1995 ஆம் ஆண்டு இந்த ப்லேடியன்களோடு தொடர்பு உள்ள பேராசிரியர் அலெக்ஸ் காலியர் தனது குழுவிற்கு பாடம் நடத்துகையில் திடீரென்று உலகின் மொழிகளை பற்றி பாடம் நடத்துகிறார். அப்போது அவர் உலகின் முதலில் பேசப்பட்ட மொழி தமிழ் மொழி தான் என கூறியுள்ளார். பின்பு தான் ப்லேடியன்கள் உதவியுடன் பல மொழிகள் பல்வேறு நாடுகளுக்கு பரப்பட்டது என்று ப்லேடியன்கள் சொல்வதாக இவர் சொல்கிறார். காணொளி இணைப்பை பாருங்கள். 

ப்லேடியன் அயல்கிரக வாசிகளை நம்பும் இந்த அமெரிக்க குழுவினை அறிவியல் வாதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், இந்த குழு தமிழ் மொழி தான் உலகின் மூத்த மொழி என்று எவ்வாறு அறிந்திருக்கக் கூடும் என்பது தான் கேள்விக்குறியாக இருக்கின்றது. தமிழர்களை தற்போது இந்த காணொளி வியப்பிலும் ஆழ்த்தி உள்ளது. உண்மையோ, பொய்யோ,  எப்படியோ தமிழ் மொழிக்கு இவர்கள் மூலமாக மேலும் பெருமை தான் என்பதில் ஐயமில்லை.

 

மேலும் ப்லேடியன்கள் பற்றிய தகவல் அறிய  இந்த இணைப்பை பாருங்கள்


[vuukle-powerbar-top]

Recent Post