Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அக்டோபர் 1ந் தேதி முதல் தொடருந்து குளிர்சாதன வகுப்பு கட்டணம் அதிகரிப்பு

அக்டோபர் 1ந் தேதி முதல் தொடருந்து குளிர்சாதன வகுப்பு மற்றும் சரக்கு கட்டணம் அதிகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடருந்து குளிர்சாதன வகுப்பு கட்டணம் மற்றும் சரக்கு கட்டணம் மீது 3 புள்ளி 7 சதவீத சேவை வரி விதிக்கப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சக உயரதிகாரி தெரிவித்தார்.

இதற்கான அறிவிப்பு எந்த நேரமும் வெளியாகும் என்றார் அவர். சேவை வரி விதிப்பால் குளிர்சாதன முதல் வகுப்பு, சொகுசுப் பயண வகுப்பு, குளிர்சாதன 2 அடுக்கு, 3 அடுக்கு, குளிர்சாதன உட்காரும் வசதி ஆகியவற்றுக்கான தொடருந்து பயண சீட்டு கட்டணம் அக்டோபர் 1ம் தேதி முதல் உயர உள்ளது.

ரயில்வே அமைச்சக பொறுப்பு வகிக்கும் சி.பி. ஜோஷி, நிதி அமைச்சர் ப. சிதம்பரம் இருவரும் நேற்று முன்தினம் சந்தித்து பேசிய நிலையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.

1ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலாகும் நிலையில், ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட பயண சீட்டுகளுக்கான சேவை வரியை பயணத்தின்போது பரிசோதகரிடம் செலுத்த வேண்டியிருக்கும்.
[vuukle-powerbar-top]

Recent Post