Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நாளை விண்ணில் ஏவப்படும் இஸ்ரோவின் 100வது ராக்கெட்

இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் நூறாவது ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது. இதனையொட்டி நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சி்ங் இன்று சென்னை வருகிறார்.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து pslv-c 21 ராக்கெட் நாளை காலை 9.51 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

பிரான்ஸ், ஜப்பான் நாடுகளின் செயற்கைகோள்களை இந்த ராக்கெட் சுமந்து செல்கிறது. இது இஸ்ரோ ஏவும் 100வது ராக்கெட் ஆகும்.

இதற்கான 51 மணி நேர கவுன்ட் டவுன், நேற்று காலை 6 மணி 51 நிமிடங்களுக்கு துவங்கியது. இந்த இடைப்பட்ட காலத்தில் ராக்கெட்டுக்கு தேவையான திட மற்றும் திரவ எரிபொருட்களை நிரப்பும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

ராக்கெட் ஏவப்படுவதை பார்வையிட பிரதமர் மன்மோகன் சிங், இன்று மாலை 4 மணிக்கு சென்னை வருகிறார்.

நாளை காலை ஸ்ரீஹரிகோட்டா செல்லும் பிரதமர், விஞ்ஞானிகளுடன் அமர்ந்து ராக்கெட் பயணிப்பதை பார்வையிடுகிறார்.

கடந்த 1975ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி இஸ்ரோ தனது பயணத்தைத் தொடங்கியது. ஆரியபட்டா என்ற முதல் செயற்கைக் கோளை இந்தியா ஏவியது.

இதனைத் தொடர்ந்து 62 செயற்கைக் கோள்களையும், 37 வெளிநாட்டு ராக்கெட்டுகளையும் இஸ்ரோ ஏவியுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post