Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்தியாவின் 100-வது விண்வெளி திட்டம் விண்ணில் பாய்ந்தது

கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் படிப்படியாக முன்னேறி வந்திருக்கும் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சித் துறை, தனது நூறாவது திட்டத்தை இன்று செயல்படுத்தியதின் மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 

இதுவரை 62 செயற்கைக் கோள்கள் மற்றும் 37 ராக்கெட்டுகளை உருவாக்கியிருக்கும் விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோ, இன்று காலை 9.51 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-21 என்ற ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்பியுள்ளது. 

விண்வெளித்துறையில் இந்தியாவுக்கு போட்டியாக விளங்கும் பிரான்ஸ் நாட்டின் ஸ்பாட்-6 மற்றும் ஜப்பானின் ப்ரோயிடர்ஸ் என்ற இரண்டு செயற்கைக் கோள்களை இந்த ராக்கெட் சுமந்து செல்கிறது. 

சென்னையிலிருந்து 110 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வை பிரதமர் மன்மோகன் சிங் நேரில் பார்வையிட்டார்.
[vuukle-powerbar-top]

Recent Post