Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

14 வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள் நிறுவனம்

கூகுள் நிறுவனம் தனது பதினான்காவது பிறந்தநாளை இன்று வெகு விமர்சையாக அமெரிக்காவில் கொண்டாடுகிறது.

கூகிள் வலைத்தலமானது மக்கள் பயன்பாட்டிற்கு வந்ததில் இருந்து வலைத்தள தேடலை மிகவும் இலகுவாக்கியதுடன் துரிதப்படுத்தியும் உள்ளது.

மற்றும் அந்தநிறுவனம் பற்றிய மேலதிகமாக

கூகிள் அல்லது கூகுள்(Google Inc.) என்பது அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்டு செயல்படும் ஓர் பன்னாட்டு நிறுவனம் ஆகும். இணையத் தேடுபொறித் தொழில்நுட்பம், மேகக் கணிமை, இணைய விளம்பரத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்நிறுவனம் செயல்படுகிறது. கூகிள் தேடுபொறி இதன் முதன்மையான சேவை. 

1998ல் லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் ஆகியோரால் துவக்கப்பட்ட இந்நிறுவனத்தின் முதல் பொதுப்பங்கு வெளியீடு 2004ல் நடைபெற்றது. முழுமையாகப் பயன்படும் வகையில் உலகின் தகவல்களை ஒருங்கிணைப்பதே கூகுளின் நோக்கமாகும். 

"தீமைத் தன்மை இல்லாதிருத்தல்" என்பது கூகுளின் அதிகாரப்பூர்வமற்ற நோக்காக அறியப்படுகிறது. இது அமீது பட்டேல் என்ற கூகிள் பொறியாளரின் கூற்றாகும். 2006-இல் இந்நிறுவனம் மவுண்டன் வியு, கலிபோர்னியாவிற்கு தனது தலைமையகத்தை மாற்றம் செய்து கொண்டது. 

உலகம் முழுதும் ஒரு மில்லியனுக்கும் மேலான தரவு மையங்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் கூகிள் ஒரு நாளில் ஒரு பில்லியனுக்கும் மேலான தேடல்களைக் கையாள்வதாகவும் இருபத்தி நான்கு பெட்டா பைட்டு அளவுள்ள தகவல்களை சேமிப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

கூகுளின் அதி விரைவான வளர்ச்சியினூடே பல புதிய மென்பொருள் சேவைகளின் தோற்றம் நிகழ்ந்துள்ளது. கூகுளின் முத்தாய்ப்பாக விளங்கும் கூகிள் இணையத் தேடலுடன், கூகிள் மெயில், கூகிள் டாக்குமெண்டுகள், கூகிள் பிளஸ், கூகிள் டாக், கூகிள் மேப்ஸ், கூகிள் நியூஸ், பிளாக்கர், யூ ட்யூப் போன்ற பல்வேறு சேவைகளை இந்நிறுவனம் வழங்குகிறது.

இணையத்தைப் பற்றிய புள்ளிவிவரங்களை அளிக்கும் அலெக்சா டாட் காம் நிறுவனம் கூகுளின் சர்வதேச முகப்புப் பக்கமான கூகிள் டாட் காமை உலகின் மிக அதிகமான வரவுகளைப் பெற்ற வலைத் தளமாக அடையாளப்படுத்தி உள்ளது.

கூகிள் குரோம் என்னும் உலவியை கூகிள் வெளியிடுகிறது. சமீப காலத்தில் அண்ட்ராய்டு என்னும் கைப்பேசி இயக்கு மென்பொருள் அத்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்ட்ராய்டு மென்பொருளை கூகுள் தலைமையிலான ஓபன் ஹான்டுசெட்டு அலயன்சு தயாரித்து வெளியிடுகின்றது.

அலை செய்திகள் குழுமமும் தனது பிறந்த நாள் வாழ்த்தை தெரிவிக்கிறது.
[vuukle-powerbar-top]

Recent Post