Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

150 பேருடன் இலங்கை வந்துள்ள சீனத் தலைவர் 16 உடன்பாடுகளில் கையெழுத்திடுகிறார்


இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் அடுத்த சில நாட்களில் பொருளாதார ஒத்துழைப்புத் தொடர்பான 16 உடன்பாடுகள் கையெழுத்திடப்படவுள்ளதாக, இலங்கை வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார்.

சுமார் 150 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவுடன் கொழும்பு வந்துள்ள சீனாவின் தேசிய மக்கள் காங்கிரசின் நிலையியல் குழுத் தலைவர் வூ பங்குவோ, சீனாவின் சார்பில் இந்த உடன்பாடுகளில் கையெழுத்திடவுள்ளார்.

சீனாவில், அதிபர் ஹு ஜின்டாவோவுக்கு அடுத்த நிலையில் – அதிகாரமுள்ள தலைவராக உள்ள வூ பங்குவோ, இன்று அலரிமாளிகையில் இலங்கை அதிபரை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

இவருடன் கொழும்பு வந்துள்ள 150 பேர் கொண்ட குழுவில், உயர்மட்ட சீனத் தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், திறைசேரிச் செயலர் பி.பி. ஜெயசுந்தர, தொடருந்து திணைக்கள முகாமையாளர் ஆரியரத்ன ஆகியோருடன் சீனத் தலைவர் உடன்பாடுகளில் கையெழுத்திடுவார்.

நுழைவிசைவு தொடர்பான உடன்பாட்டில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் கையெழுத்திடுவார்” என்றும் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post