Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வரலாற்றுச் சிறப்பு மிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் 150வது ஆண்டு விழா

வரலாற்றுச் சிறப்பு மிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் 150வது ஆண்டு விழா, இன்று கோலாகலமாக நடைபெற்று வருகின்றது.

இதனை முன்னிட்டு, சென்னை உயர்நீதிமன்ற வளாகம் மெருகேற்றப்பட்டு, வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுவிழா நிகழ்ச்சிகள், நேரு விளையாட்டு அரங்கில் இரண்டு கட்டங்களாக நடந்து வருகின்றன. காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை ஒரு கட்டமாகவும், மாலை 5 மணிக்கு இரண்டாவது கட்டமாகவும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

மாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி, மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், தமிழக ஆளுநர் ரோசைய்யா, முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் 150வது ஆண்டை குறிக்கும் வகையில், நினைவுக் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல்லை முதலமைச்சர் ஜெயலலிதா நாட்டுகிறார்.
[vuukle-powerbar-top]

Recent Post