Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளம் : காவல்துறையின் அராஜகத்தை கண்டித்து அண்ணாசாலையில் மறியல் ! 150 பேர் கைது

இன்று அண்ணாசாலையில் கூடங்குளத்தில் இடம்பெற்ற காவல்துறையின் அராஜகத்தை எதிர்த்தும் கூடங்குள மக்களின் கோரிக்கைக்கு ஆதரவாகவும் தமிழர் உணர்வாளர்கள் மற்றும் கட்சிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

சுமார் காலை 9.45 மணியளவில் தொடங்கிய இந்த சாலை மறியல் போராட்டத்தினால் ஒரு மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பித்ததாக அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

அதை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் மல்லை சத்தியா, பண்ருட்டி வேல்முருகன், காஞ்சி மக்கள் மன்றத்தினர், மதிமுக, மே 17 இயக்கத்தினர், கொளத்தூர் மணி, தமிழ் தேச பொதுஉடைமைக் கட்சியினர் மற்றும் பல கட்சியினர் உற்பட 150 பேர் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறன போராட்டங்கள் தமிழ் நாட்டில் பரவலாக நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கபடுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post