Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கை நாட்டவர்கள் 184 பேர் திருச்சியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வெளியேற்றம்

வேளாங்கன்னி மற்றும் பூண்டி மாதா ஆலயங்களுக்கு சுற்றுலா வந்த இலங்கை நாட்டவர்கள் 184 பேர் திருச்சியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கொழும்பு திரும்பி சென்றனர்.

இவர்களில் 83 பெண்கள், 36 குழந்தைகள் அடங்குவர். இவர்களை கொழும்பு அழைத்து செல்வதற்காக ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் சிறப்பு விமானத்தை இயக்கியது.

இம்மாதம் 15 ? ம் தேதி வரை தமிழகத்தில் சுற்றுலா பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த இவர்கள் எதிர்ப்பு காரணமாக நேற்றே நாடு திரும்பினர்.

இவர்கள் இலங்கை சென்றதையொட்டி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

முன்னதாக வேளாங்கன்னி கோயிலுக்கு வந்த இலங்கை நாட்டவர்களை திருப்பி அனுப்பக்கோரி மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் பயணம் செய்த பேருந்து மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மதிமுகவைச் சேர்ந்த 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.
[vuukle-powerbar-top]

Recent Post