Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சிங்கம் 2 படத்திற்காக சூர்யாவால் ஒதுக்கப்பட்ட 180 நாட்கள்.


மிக கவனமாக திரைக்கதைகளை கையாண்டு, குறிப்பிட்ட தேதிக்குள் படங்களின் படப்பிடிப்புக்கள் அனைத்தையும் முடிக்கும் திறைமையான தமிழ் சினிமா இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் இயக்குனர் ஹரி.

நடிகர் சூர்யாவை வைத்து அவர் இயக்கிய சிங்கம் படம் மிக பிரபலமாக வெற்றி கண்டதை அடுத்து, அதன் தொடர்ச்சியாக சிங்கம் 2 படத்தின் படப்பிடிப்பை காலம் தாழ்த்தாமல் தொடங்கியுள்ளார் இயக்குனர் ஹரி.

சிங்கம் 2 படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் சூர்யாவால் 180 நாட்களே ஒதுக்கிக்கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்களுக்குள் முழுப் படப்பிடிப்பையும் முடிக்கவேண்டும் என்ற வெறியுடன் அவர் செயல் பட்டுக்கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹரியின் படங்களில் பாடல் காட்சிகள் மட்டுமே வெளிநாடுகளில் படம்பிடிக்கப்பட்டு வந்தன.இதற்கு மாறாக இம்முறை சில சண்டை காட்சிகளை வெளி நாடுகளில் எடுக்க தீர்மானித்துள்ளார் ஹரி.

இதற்காக அண்மையில்  காப் டவுன் மற்றும் டர்பன் போன்ற தென் ஆபிரிக்கா கண்டத்திலுள்ள நகரங்களுக்கு சென்று தனக்கான பிரத்தியேக இடங்களை பார்வையிட்டு வந்துள்ளார். அத்தோடு நைஜீரியா நாட்டை சேர்ந்த ஒரு நடிகரையும் இப்படத்தில் நடிக்க வைக்க தீர்மானித்துள்ளார்.

மிக விரைவில் தென் ஆபிரிக்கா கண்டத்தை நோக்கி பறக்கவுள்ளது சிங்கம் 2 படக்குழு.



[vuukle-powerbar-top]

Recent Post