Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

2000 இலங்கை படையினர் பங்கேற்கும் ‘ஒப்பரேசன் நீர்க்காகம்-III‘


சுமார் இரண்டாயிரம்
இலங்கைப் படையினர் பங்கேற்கும் கூட்டு இராணுவ ஒத்திகை, அடுத்தவாரம் மட்டக்களப்பு, வாகரையில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கையின் முப்படையினர் மற்றும் வெளிநாட்டுப் படையினர் இந்தப் போர்ப்பயிற்சியில் பங்கேற்கவுள்ளனர்.

‘நீர்க்காகம்– lll – 2012‘ என்ற பெயரில் இந்தப் போர்ப்பயிற்சியை இலங்கை இராணுவம் ஏற்பாடு செய்துள்ளது.

16 நாட்கள் நடைபெறவுள்ள இந்தப் போர்ப்பயிற்சி வரும் செப்ரெம்பர் 10ம் நாள் தொடங்கி 25ம் நாள் வரை இடம்பெறவுள்ளது.

மாலைதீவு, பாகிஸ்தான், பங்களாதேஸ், இந்தியா ஆகிய நாடுகளின் இராணுவ அதிகாரிகள் இந்தப் போர்ப்பயிற்சியில் பங்கேற்கவுள்ளனர்.

இந்தியா இரண்டு பார்வையாளர்களை அனுப்பவுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post