Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நடுக்கடலில் 21 நாட்களாக தத்தளித்த பருத்தித்துறை அகதிகள் படகு தமிழ்நாட்டு மீனவர்களால் மீட்பு


பருத்தித்துறையில் இருந்து 67 பேருடன் அவுஸ்ரேலியாவுக்குக் புறப்பட்ட படகு, இயந்திரம் பழுதடைந்ததால், 21 நாட்களாக நடுக்கடலில் தத்தளித்த நிலையில் தமிழ்நாட்டு மீனவர்களால் காப்பாற்றி கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தப் படகில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை, முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 4 சிங்களவர்களும், 3 பெண்கள் உள்ளிட்ட 63 தமிழர்களும் இருந்தனர்.

பேபி என்பவரின் தலைமையில் இவர்கள் கடந்தமாதம் 24ம் நாள் பருத்தித்துறையில் இருந்து படகு ஒன்றில் புறப்பட்டனர்.

இரண்டு நாட்கள் கழித்து இவர்களின் படகு திடீரென பழுதடைந்தது.

இதையடுத்து அவர்கள் நடுக்கடலில் உண்வோ, குடிநீரோ இல்லாமல் தவித்து வந்தனர்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் மீன்பிடிக்கச் சென்ற ஈச்சாங்குப்பத்தைச் சேர்ந்த தம்பிராஜ் என்பவர், கடலில் தத்ளித்த 67 பேரையும் மீட்டு நாகபட்டினம் துறைமுகத்திற்கு அழைத்து வந்தார்.

அவர்களிடம் தமிழ்நாடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
[vuukle-powerbar-top]

Recent Post