Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அணுஉலையை மூடக்கோரி 24 ம் தேதி சென்னையில் மனிதசங்கிலி போராட்டம்

இடிந்தகரையில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினரை திரும்பப் பெற வலியுறுத்தி, வரும் 24ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெறவுள்ளது.புதுச்சேரி மற்றும் நாகப்பட்டினத்திலும் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

இடிந்தகரையில், அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலை கண்டித்து, நெல்லை, குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இந்த நிலையில், தூத்துக்குடியில் இருந்து இடிந்தகரை நோக்கி பேரணி செல்ல முயன்ற, திராவிட விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்டவர்களை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

பின்னர், மாலையில் கொளத்தூர் மணி விடுவிக்கப்பட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி, வரும் 22ம் தேதி தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெறும் என்றார்.
[vuukle-powerbar-top]

Recent Post