Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ராஜபக்சேவிற்கு கறுப்புக் கொடி காட்ட முயன்ற அதியமான் உட்பட 25 பேர் கைது


ராஜபக்சே சாஞ்சிக்கு  வருவதை ஒட்டி அவனுக்கு கறுப்புக் கொடி  காட்ட சென்ற வைகோ மற்றும் அவரின் தொடண்டர்கள் மத்திய பிரதேச எல்லையில் கைது செய்யப்பட்டது நாம் அறிந்ததே . 

ஆனால் தமிழர்கள் சிலர் மும்பை வழியாக சாஞ்சிக்கு  சென்று ராஜபக்சேவிற்கு கறுப்புக் கொடி  காட்ட சென்றுள்ளனர் . அந்த வகையில் தமிழர் முன்னேற்ற  கழக தலைவர்  அதியமான் சென்னையில் இருந்து நேற்று சாஞ்சிக்கு  விமானம் மூலமாக மும்பை சென்று அங்குள்ள தமிழ் உணர்வாளர்கள்  கணேசன், காமராஜ், நாடோடித் தமிழன் முதலானவர்கள் சுமார் 25 பேர்களை அழைத்துக் கொண்டு சாஞ்சி நோக்கி தொடர்வண்டியில் சென்றுள்ளனர் .

அவர்கள் அனைவரும் அபித்காஞ் என்ற இடந்தை வந்தடைந்து  காலையில் ராஜபக்சேவிற்கு  கறுப்புக் கொடி  காட்ட திட்டமிட்டனர். ஆனால் மத்திய பிரதேச காவல் துறை எப்படியோ மோப்பம் பிடித்து ஒவ்வொரு தமிழரையும் அடையாளம் கண்டு அவர்கள் தங்கி இருந்த விடுதியை சுற்றி  வளைத்து . இவர்களோடு மதிமுக தொடர்கள் சுமார் 300 பேர்களையும் கைது செய்து  சமூக கூடத்தில் அடைத்து வைத்தது காவல் துறை. இவர்களுடைய பெயர்களை தொடருந்து பதிவேட்டில் பார்த்து , இவர்கள் தமிழர் தான் என்று அடையாளம் கண்டனர் காவல் துறை. முடிவில் கடும் சிரமத்திற்கு நடுவே இவர்கள் கறுப்புக் கொடி  காட்ட முயற்சி செய்தது பலனற்று போனது அனைவர்க்கும் வருத்தம் .  சென்னையில் இருந்து சாஞ்சி வரை பலவழிகளில் சென்ற தமிழ் உணர்வாளர்கள் அனைவருக்கும்  நமது வாழ்த்துகளை உரித்தாக்குவோம்.  








[vuukle-powerbar-top]

Recent Post