Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

"தாண்டவம்" மூலமாக ஒரே நாளில் கிடைத்த 25 இலட்சம் ரூபாய்.


நேற்றைய தினம் சென்னை சத்தியம் சினிமா வளாகத்தின் 6 திரையரங்குகளிலும்  திரையிடப்பட்ட "தாண்டவம்" படத்தின் சிறப்பு காட்சியின் போது, பெறப்பட்ட சுமார் 25 இலட்சம் ரூபாய் பணமானது,தேசிய கண் பார்வை அற்றோர் சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள யு.டி.வி மோஷன் பட நிறுவன அதிகாரிகள், நேற்றைய தினம் மேற்படி காட்சிகளின் மூலமாக  பெறப்பட்ட பணமானது, தேசிய கண் பார்வையற்றோர் சங்கத்திற்கு வழங்கப்பட்டமை தங்களுக்கு  மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறியிருந்தனர்.

நேற்றைய காட்சியின் போது விஜய்,சிம்பு,ஹாரிஸ் ஜெயராஜ்,விஜய் அன்டனி,வெங்கட் பிரபு மற்றும் ஏராளமான தமிழ் சினிமா பிரபலங்கள் சமூகமளித்திருந்தனர்.

[vuukle-powerbar-top]

Recent Post