Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வரும் 28 ஆம் தேதி தனது ஆட்டத்தை தொடங்கும் " தாண்டவம்".


எல்லோராலும் மிக ஆவலாக எதிர்பார்க்கப்படும் விக்ரம் நடித்த தாண்டவம் படமானது இன்னும் இரண்டு  நாட்களில் திரைக்கு வர இருக்கிறது.

மிக பெரிய பொருட் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தை யு.டி.வி.மோஷன் பிக்சர்ஸ் பட நிறுவனம் வெளியிடவுள்ளது.இயக்குனர் ஏ.எல்.விஜயின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள "தாண்டவம்" தமிழ் நாட்டில் மட்டும் சுமார் 400 திரையரங்குகளில்   வரும் 28 ஆம் தேதி தனது ஆட்டத்தை தொடங்கவுள்ளது.

இப்படத்தில் விக்ரம்,ஜெகபதி பாபு,அனுஷ்கா,எமி ஜாக்சன், லக்ஷ்மி ராய் மற்றும் சந்தானம் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே தமது இரசிகர்களை சந்தோசப் படுத்த இப்படத்தில் களமிறகியுள்ளனர்.

"தாண்டவம்" படத்தின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் ஜி .வி.பிரகாஷ்குமார்."யு" தரச் சான்றிதழுடன் வெளியாகும் இப்படம் ஒரே நேரத்தில் தெலுகுவில் "சிவ தாண்டவம்" என்ற பெயரில் வெளியாகவுள்ளது.

[vuukle-powerbar-top]

Recent Post