Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அக்டோபர் 29 ~ வரலாறு படைக்கும் சட்டமன்ற முற்றுகை போராட்டம் - உதயகுமார் அறிவிப்பு


செப்டெம்பர் 27 இடிந்தகரை :  இன்று இடிந்தகரையில் அனைத்து  அணு உலைக்கு எதிரான கட்சிகளும் இயக்கங்களும் ஒன்று கூடி ஒரு முக்கியமான முடிவை எடுத்தனர். இந்த கூட்டத்தில் பழ நெடுமாறன் அய்யா, பண்ருட்டி வேல்முருகன் , திரு கொளத்தூர் மணி , விடுதலை சிறுத்தைகள் வன்னியரசு , உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தின்  முடிவில் , அணு உலைக்கு எதிராக தமிழக தலைமை செயலகத்தை வரும் அக்டோபர் மாதம் 29 நாளில் ஒரு லட்சம் பேர்களாய்  திரண்டு முற்றுகை  செய்வதாக தீர்மானம் செய்தனர். சட்டமன்றத்தின் வைர விழா ஆண்டு  நாளாக அக்டோபர் 29 நாள் அனுசரிக்கப் படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது . இந்த செய்தியை திரு உதயகுமார் வெளியிட்டார்.  

இந்த முற்றுகை போராட்டம் தமிழர் வரலாறில் இடம்பெறப் போகும் மிக முக்கியமான போராட்டம் ஆகும்  . காரணம்  ஈழத்தில் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்ட போதும் கூட ஒரு லட்சம் மக்கள் இப்படியானதொரு முற்றுகை போராட்டம் நடத்தியது இல்லை. அணு உலைக்கு எதிராக தமிழக மக்கள் பெரிதும் திரும்பியதால் நிச்சயம் அணு உலை எதிர்பாளர்கள்  ஒரு லட்சம் பேர்கள் தமிழக சட்டமன்றத்தை முற்றுகை செய்து உலகத்தையே தமிழ்நாட்டின் பக்கம்  திரும்பச் செய்வார்கள் என்பதில்  ஐயமில்லை. 








[vuukle-powerbar-top]

Recent Post