Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

2ஜி அலைக்கற்றை வழக்கில் கனிமொழி மனு இன்று விசாரணை

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து தம்மை விடுவிக்கக் கோரி திமுக எம்.பி. கனிமொழி தாக்கல் செய்த மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கொள்கை வகுப்பதில் தொடர்பு இல்லை என்றும், கலைஞர் டிவி தொடர்பான ஆவணங்கள் எதிலும் கையெழுத்திடவில்லை என்றும், தமது மனுவில் கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு, நீதிபதி ஏ.கே.பதக் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது. கனிமொழி சார்பில் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆஜராகிறார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து விடுவிக்க கோரி கலைஞர் டிவியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சரத்குமார் தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.
[vuukle-powerbar-top]

Recent Post