Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சிவகாசி பட்டாசி ஆலையில் பயங்கர தீ விபத்து - 30 க்கும் மேற்பட்டோர் பலி


தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டி என்ற இடத்தில் ஒரு பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் முப்பதுக்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 

விபத்து ஏற்பட்டபோது, நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பட்டாசு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. அப்போது திடீரென ஏற்பட்ட தீ, மளமளவென பல்வேறு அறைகளுக்கும் பரவியதாகக் கூறப்படுகிறது.

 இதில் 40-க்கும் மேற்பட்ட அறைகளில் வைக்கப்பட்ட வெடிமருந்துகள் மற்றும் பட்டாசுகள் வெடித்துச் சிதறியிருக்கின்றன. அருகில் உள்ள கிராம மக்கள், அங்கு ஓடிச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட முயன்றபோது தீ மிகுந்த தீவிரத்துடன் எரியத்துவங்கியதுடன் மேலும் வெடிமருந்துகள் வெடித்ததன. இதையடுத்து, ஆலையின் அருகே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் சிலரும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. 

தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கப் போராடி வருகிறார்கள். இந்த விபத்தில், முப்பதுக்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என்று ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post