Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கை சீனாவிடமிருந்து 3000 புதிய பேருந்துகளைக் கொள்வனவு செய்கிறது

இலங்கை அரசாங்கம் சீனாவிடமிருந்து 3000 புதிய பேருந்துகளைக் கொள்வனவு செய்வது தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபடுகின்றது. இதனை எதிர்த்து இலங்கையிலுள்ள  தனியார் பேருந்து இயக்குனர்களால் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், இலங்கை அரசாங்கமானது தொடர்ந்தும் பேருந்துக் கொள்வனவு தொடர்பில் சீனாவுடன் பேச்சுக்களை நடாத்திவருவதாக, இலங்கை  போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார். 

"இந்தப் பேருந்துகளைக் கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளோம். ஆனால் இன்னமும் இது தொடர்பில் சீன நிறுவனத்துடன் பேச்சுக்களை மேற்கொள்கிறோம். இது தொடர்பான இறுதித் தீர்மானம் இதுவரையில் எட்டப்படவில்லை" எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

பொதுப் போக்குவரத்துத் துறையில் காணப்படும் தேவையைக் கருத்திற் கொண்டு சீனாவிடமிருந்து பேருந்துகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக கடந்த வாரம் 
இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது. 

தற்போது 
இலங்கை அரசுக்குச் சொந்தமாக 5000 பேருந்துகள் காணப்படுவதாகவும் இவற்றுள் 3500ற்கும் மேற்பட்ட பேருந்துகள் 15 ஆண்டுகாலப் பழமை வாய்ந்ததால் இவற்றுக்குப் பதிலாக புதிய பேருந்துகளைப் பயன்படுத்த வேண்டிய தேவையுள்ளதாகவும் வெல்கம தெரிவித்துள்ளார். 

இதனாலேயே 
இலங்கை அரசாங்கமானது தற்போதைய வீதி தரத்துக்கு ஏற்ற பேருந்துகளை சீனாவிடமிருந்து கொள்வனவு செய்வது தொடர்பாக பரிசீலித்து வருவதாக அமைச்சர் வெல்கம மேலும் குறிப்பிட்டுள்ளார். 
[vuukle-powerbar-top]

Recent Post