Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கன்னியாகுமரி மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் -30,000 பேர் பங்கேற்பு


கூடன்குளத்தில் மீனவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் அணு உலையை மூடக்கோரியும் கன்னியாகுமரி மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக கூடன்குளத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது மக்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டனர்.மேலும் தூத்துக்குடியில் ஒரு மீனவர் சுட்டுக் கொள்ளப்பட்டார்.இதனால் காவல்துறையை கண்டித்தும் அணு உலையை மூடக்கோரியும் கன்னியாகுமரி மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் 48 மீனவ கிராமங்களைச் சேர்ந்த சுமார் 30,000 மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.மேலும் அணு உலையை மூடும் வரையில் இப்போராட்டம் தொடரும் எனவும் இன்று ஒரு நாள் மட்டும் 1 கோடிக்கும் மேல் இழப்பீடு ஏற்ப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
[vuukle-powerbar-top]

Recent Post