Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தாயக்தில் பணியாற்றுவதற்காக 300 பெண் காவல்துறையினர் தற்போது பயிற்சியில்!


தமிழர்தாயக்தில் பணியாற்றுவதற்காக 300 பெண் காவல்துறையினர் தற்போது பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் ரி.ஈ ஆனந்தராஜாவிற்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று முன்தினம் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் நடைபெற்றது.

மனித உரிமை ஆணைக்குழுவுடன் சிவில் சமூகப் பிரதிநிதிகள் இணைந்து செயற்படுவதற்கான செயற்திட்டம் ஒன்றினை அமைப்பது தொடர்பிலும் ஏதிர்காலத்தில் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் ஒன்றிணைவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டது.இதன் போது யாழ். மாவட்ட காவல்துறை நிலையங்களில் சிறுவர் மற்றும் பெண்கள் பகுதி தொடர்பிலும் முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பிலும் காவல்துறை சேவையில் தமிழ் பெண் காவலர்களை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதன்படி தற்போது தமிழ் பெண்பொலிஸார் 300 பேருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதுடன் அவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே நியமிக்கப்படவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post