Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வடகிழக்கு மாநிலங்களில் கடும் நிலச்சரிவுகளில் சிக்கி 30க்கும் அதிகமானோர் உயிரிழப்பு

வடகிழக்கு மாநிலங்களில் கடும் நிலச்சரிவுகளில் சிக்கி 30க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிக்கிம் மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால் மலைப்பகுதிகளில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 

காங்டோக் என்ற இடத்தில் மண்ணில் புதைந்த நிலையில் 21 சடலங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய திபெத் எல்லை காவல்துறையினர் சிலரும் இறந்துள்ளனர். மேலும் சிக்கிமின் வடக்கு பகுதியில் 8 பேர் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். 

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பலரும் நிலச்சரிவுகளில் சிக்கி காணாமல் போயிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அசாம் மாநிலத்தில் பெய்துவரும் கனமழையில் 15 மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. 5 பேர் உயிரிழந்தனர். 

இதேபோன்று அருணாச்சல பிரசேத்திலும் பலத்த மழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து வடகிழக்கு மாநிலங்களில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
[vuukle-powerbar-top]

Recent Post