Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கிழக்கு உள்ளிட்ட 3 மாகாணசபைகளுக்கான தேர்தல் – தொடங்கியது வாக்களிப்பு


இலங்கையில் கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.

கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய மாகாணசபைகளின் 114 ஆசனங்களுக்கு நடைபெறவுள்ள இந்தத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமானது. மாலை 4 மணிவரை வாக்களிப்பு இடம்பெறும்.

இந்தத் தேர்தலில் பல்வேறு அரசியல்கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 3073 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இன்றைய தேர்தலின் மூலம் வடமத்திய மாகாணசபைக்கு 33 உறுப்பினர்களும், சப்ரகமுவ மாகாணசபைக்கு 44 உறுப்பினர்களும், கிழக்கு மாகாணசபைக்கு 37 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

மூன்று மாகாணங்களிலும் 3247 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படடுள்ளன. தேர்தல் கடமைகளில் 35,000 அரச பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக 21,000 இலங்கை காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாலை 4 மணியளவில் வாக்களிப்பு முடிந்தவுடன், மாலை 5 மணியளவில் அஞ்சல் வாக்குகளை எண்ணும் பணி மாவட்ட செயலகங்களில் ஆரம்பமாகும்.

வாக்குப்பெட்டிகள் வந்தடைந்ததும், இரவு 8 மணிக்கு முன்னதாக, வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.
[vuukle-powerbar-top]

Recent Post