Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சாரம் சரிந்து விழுந்து 4 பேர் பலி


புதுச்சேரியில் குடிநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பனியில் ஈடுபட்டிருந்த போது இரும்புச் சாரம் சரிந்து விழுந்து 4 பேர் பலி.
புதுச்சேரி லாஸ்பேட்டை அசோக் நகரில் உள்ள மேல் நிலை குடிநீர் தேக்க தொட்டியில் இன்று சுத்தம் செய்யும் பணி நடந்து கொண்டிருந்தது.100 அடி உயரம் கொண்ட இந்த தொட்டியை சுத்தம் செய்ய தானியங்கி லிஃப்ட் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது இரும்பிக் கம்பியால் அமைக்கப்பட்ட சாரம் திடீரென சரிந்து விழுந்தது.இதில் மேலே நின்று கொண்டிருந்த இரு தொழிலாளர்கள் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் சாரம் சரிந்து விழுந்ததில் கீழே நின்று கொண்டிருந்த 6 தொழிலாளர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது.இதில் இரு தொழிலாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
[vuukle-powerbar-top]

Recent Post