Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

40 தமிழ் அகதிகளை நௌரு தீவுக்கு அனுப்பியது அவுஸ்ரேலியா


அவுஸ்ரேலியாவின் கிறிஸ்மஸ்தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 தமிழ் அகதிகள் நேற்றிரவு அங்கிருந்து சுமார் 7000 கி.மீ தொலைவில் உள்ள நௌரு தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு 8 மணியளவில் கிறிஸ்மஸ் தீவில் இருந்த 40 தமிழ் அகதிகளை ஏற்றிய, வாடகைக்கு அமர்த்தப்பட்ட ஜெட் விமானம் டார்வின் வழியாக நௌரு தீவை இன்று காலை சென்றடைந்தது.

இவர்களுடன் 90 அவுஸ்ரேலிய காவல்துறை அதிகாரிகளும் பாதுகாப்புக்காக அந்த விமானத்தில் பயணம் செய்தனர்.

அதிகளவில் வந்து குவியும் அகதிகளைக் கட்டுப்படுத்த நெளரு மற்றும் பபுவா நியுகினியாவின் மனஸ் தீவு ஆகியவற்றுக்கு ஒரு பகுதி அகதிகளை அனுப்ப அவுஸ்ரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

இதனடிப்படையிலேயே, முதலாவது தொகுதி தமிழ் அகதிகள் நேற்றிரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு நௌரு தீவில், உடனடியாக வசிப்பிட வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை.

தங்குவதற்கான நிரந்தர கட்டடம் அமைக்கப்படும் வரையில் இவர்கள் அங்கு தற்காலிக கூடாரங்களிலேயே தங்க வேண்டும்.

நௌரு தீவில் 1500 அகதிகளையும், பபுவா நியுகினியாவில் 600 அகதிகளையும் தங்கவைக்க அவுஸ்ரேலியா முடிவு செய்துள்ளது.

பசுபிக் தீவான நௌரு உலகின் மிகச்சிறிய குடியரசு நாடாகும்.

கொமன்வெல்த்தில் அங்கம் வகிக்கும் இந்த நாட்டின் மொத்த பரப்பளவு வெறும் 21 சதுர கிலோ மீற்றர் என்பதுடன் சனத்தொகை கிட்டத்தட்ட 10,000 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post