Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சிவகாசி தீ விபத்தில் 46 பேர் பலி மற்றும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்


விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள முதலிப்பட்டியில் இயங்கிவரும் ஓம் சக்தி பட்டாசு ஆலையில் ஏறப்பட்ட தீ விபத்தில்,ஆலையில் வேலைபார்த்துக் கொண்டிருந்த ஊழியர்களும் அவர்களை காப்பற்ற சென்ற பொதுமக்களும் இத்தீவிபத்தில் பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் அருகில் இருந்த 50-க்கும் மேற்ப்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளாதாக தகவல்கள் தெரிக்கின்றன. மேலும் ஆலையில் 40க்கும் மேற்ப்பட்ட கட்டிடங்கள் தரைமட்டாமாகியுள்ளன.

பலி எண்ணிக்கை மேலும் உயருமென்றும் அஞ்சப்படுகிறது. வெடி பொருட்கள் அதிகாம வைக்கப்பட்டுள்ளதால் தீ பயங்கராமாக பரவியுள்ளது. தீ விபத்தை கட்டுப்படுத்த 15க்கும் மேற்ப்பட்ட தீயணைப்பு வாகணங்கள் ஈடுபட்டுள்ளது.மேலும் மதுரையிலிருந்து தீயணைப்பு வாகணங்கள் வந்துகொண்டிருக்கின்றன.தீவிபத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை விருதுநகர்,மதுரை மற்றும் சாத்தூர் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவுகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

மேலும் சிறப்பு ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தீபாவளிக்காக அதிக அளவில் வெடிகள் குவிக்கப்பட்டுள்ளதால் விபத்து ஏற்ப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் சிறிய அறையில் அதிக அளவில் தொழிலாளர்கள் வேலைபார்த்ததால் உயிரிழப்புகள் அதிக அளவில் ஏற்ப்பட்டுள்ளது.மொத்தம் 260 தொழிலாளர்கள் உள்ளே வேலை பார்த்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல் சேகரிக்க சென்ற செய்தியாளர்களும் சிக்கிக் கொண்டதாகவும் இன்னும் உயிரிழப்புகள் ஏற்ப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றன.கடந்த முறை நடந்த விபத்தை விட இது பெரிய அளவில் நடந்துள்ளாதகவும் அறியப்படுகிறது.

விபத்தில்  மகனை பறிகொடுத்த   தாய் கதறி அழும் காட்சி  


படம் உதவி  : ரகுநாத் சுரேந்திரன்  
செய்தி : பிரசாந்த் தமிழ் 
[vuukle-powerbar-top]

Recent Post