Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூட்டமைப்பின் 4 உறுப்பினர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்க ஆளும்கட்சி முயற்சி


கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட நான்கு உறுப்பினர்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவு அளிக்கும்படி அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணையாளருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கிழக்கில் ஆட்சியமைக்க ஆதரவு தரும்படி தமது நான்கு உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முறையிடப்பட்டுள்ளது.

‘பலமான ஆயுதபாணிகள்‘ இதற்காக பெருந்தொகைப் பணத்தை வழங்குவதாக பேரம் பேசி மிரட்டியுள்ளதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post