Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஜார்கண்ட் மாநிலத்தில் 4 மாவோயிஸ்ட்டுகளை காவல்துறையினர் சுட்டுக் கொலை

ஜார்கண்ட் மாநிலத்தின் லெட்கெர் மாவட்டத்தில் 4 மாவோயிஸ்ட்டுகளை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். மேலும், அவர்களிடம் இருந்த 3 துப்பாக்கிகள், 33 துப்பாக்கிக் குண்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.  

லெட்கெர் மாவட்டத்தில் 20 முதல் 25 மாவோயிஸ்டுகள் இருப்பதாகவும் அவர்கள் அங்குள்ள அருவி ஒன்றில் குளித்துக் கொண்டிருப்பதாகவும் தங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர். 

இதனையடுத்து, உள்ளூர் போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் காவல்துறை அவர்களை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர். 

இதில் மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதனிடையே, ஆந்திரப்பிரதேசத்தில் ஒரு மாவோயிஸ்டு தலைவர் உட்பட 4 மாவோயிஸ்டுகளை காவல்துறை நேற்று கைது செய்தனர்.

இவர்கள் மாவோயிஸ்டுகளுக்கு கடிதங்களை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post