Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முன்பதிவில் ஐ போன் 5 சாதனை - ஒரே நாளில் 20 இலட்சம் பதிவுகள்

அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் iPhone 5 செல்போனுக்கான முன்பதிவு 24 மணி நேரத்தில் 20 லட்சத்தை தாண்டியுள்ளது. நவீன வசதிகளை கொண்ட iPhone 5ஐ கடந்த புதன்கிழமை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை முன்பதிவு தொடங்கியது.

முன்பதிவு தொடங்கிய 24 மணி நேரத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் iPhone 5 ஐ வாங்க விண்ணப்பித்துள்ளனர். இது, iPhone 4S செல்போனுக்கு கிடைத்த வரவேற்பைவிட அதிகம். 

இதற்கிடையே iPhone 5 செல்போன் விற்பனை வரும் 21ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் முதலில் முன்பதிவு செய்தவர்களுக்கு அக்டோபர் மாதம் மற்றும் அதற்கு பின்பு தான் செல்போன் கிடைக்கும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவன iPhone 5ஐ வாங்க உலகம் முழுவதிலுமுள்ள செல்போன் கடைகளிலும் இணையதளம் மூலமாகவும் ஏராளமானோர் முன்பதிவு செய்து வருகின்றனர்.
[vuukle-powerbar-top]

Recent Post