Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அதிகத் திறன் கொண்ட ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 5

வழக்கமான ஸ்மார்ட் போனை விட அதிகத் திறன் கொண்ட ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 5 இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

அமெரிக்க சந்தையில் வரும் 21-ந் தேதி முதல் இந்த போன்கள் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் புதிய ஐபோன் 5 சுமார் 4 அங்குல திரை கொண்டது. இதுவரை வெளிவந்த போன்களிலேயே மிகவும் மெலிதான மற்றும் எடை குறைவானது. 

முற்றிலும் கண்ணாடி மற்றும் அலுமினியத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள 
இந்த போனில் ஏ- 6 ப்ராசஸர் இணைக்கப்பட்டுள்ளது. 

இதனால் தற்போதுள்ள போன்களை விட இருமடங்கு வேகமாக செயல்படும். மேலும் ஐபோன் 5 தில் 3 மைக்ரோபோன்கள் இடம்பெற்றுள்ளன. 

8 மொகாபிக்சல் கேமராவும் இணைக்கப்பட்டுள்ளது. தெள்ளதெளிவான பார்வைக்கு ரெட்டினா டிஸ்பிளே என்றழைக்கப்படும் தொழில்நுட்பம் இதில் உள்ளது. ஐ போனுக்கே உரிதான வெள்ளை நிற இயர் போன்களும் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 

 இதற்கான அறிமுக விழா சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்றது. இந்த ஆண்டு இறுதியில் இவை 100 நாடுகளில் விற்கப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post