Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இடிந்தகரையில் 5000 மேற்பட்டோர் இன்று கடல்நீருக்குள் இறங்கிப் போராட்டம்

இடிந்தகரையில் கைது நடவடிக்கைகளைக் கைவிட வலியுறுத்தி கூடங்குளம் போராட்டக்குழுவினர் 5000 திற்கும் மேற்பட்டோர் இன்று கடல்நீருக்குள் இறங்கிப் போராட்டம் நடத்தி வருகின்றனர் என எம் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இந்தப் போராட்டம் 4 மணி வரை நடைபெறும் என போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்பும் பணியை மேற்கொள்ளக் கூடாது, கைது நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும், 

கைது செய்யப்பட்டவர்களை எந்த நிபந்தனையும் இன்றி விடுவிக்க வேண்டும், காவல்துறையினரின் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஆகிய 4 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை நடத்தி வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் தகவலுக்கு அலை செய்திகளுடன் இணைந்திருங்கள்.
[vuukle-powerbar-top]

Recent Post