Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

50,000 பேர்களுடன் தமிழகமெங்கும் தொடர்வண்டிகளை முடக்கிய தமிழக வாழ்வுரிமை கட்சி (படங்கள்)



தமிழ் நாட்டில் ராஜபக்சேவின் வருகையை  கண்டித்து பல் வேறு இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது. பல கட்சிகள் பல்வேறு வடிவங்களில் போராட்டம் செய்கின்றனர். வைகோ அவர்களின் தலைமையில் ராஜபக்சேவிற்கு கறுப்புக் கோடி காட்ட பல ஆயிரம் பேர்கள் மத்திய  பிரதேசத்திற்கு சென்றுள்ளனர். இன்னும் பல தமிழ் உணர்வாளர்கள் தனித் தனியே மத்திய பிரதேசத்திற்கு சென்றுள்ளனர். 

தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிற வேளையில், தமிழக வாழ்வுரிமை கட்சி தங்கள் போராட்டத்தை மிகச் சிறப்பாக முன்னெடுத்துச் சென்றனர். ராஜபக்சேவிற்கு எதிராக நடைபெற்ற இந்த போராட்டத்தால் தமிழக தொடர் வண்டிகள் போக்குவரத்து தமிழகமெங்கும் முடங்கியது. சுமார் 50,000 பேர்கள் பங்குபெற்ற இப்போராட்டத்தை  கட்டுப் படுத்த காவல் துறை திணறியது. பல மணிநேரம் தொடர்வண்டி போக்குவரத்து நின்றது. 

கடலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் தலைமையில் பிரமாண்ட பேரணியாக சென்ற கூட்டம் தொடர்வண்டியை  மறித்து  நின்றது . அதை தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தொண்டர்கள் சிதம்பரம், விழுப்புரம் , காஞ்சிபுரம் , திருவண்ணாமலை, வந்தவாசி, வேலூர், கிருஷ்ணகிரி ,தருமபுரி, சேலம், கரூர் , ஈரோடு, கோவை, திருச்சி, கன்னியகுமாரி ஆகிய நகரங்களில் தொடர்வண்டியை மறித்து போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் இத்தனை ஊர்களில் ஒரே நாளில் இவ்வளவு   பெரிய அளவில் தொடர்வண்டி மறியல் போராட்டம் அண்மைய காலத்தில் நடை பெற்றதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.  சுமார் 25,000 பேர்கள் இந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.  












[vuukle-powerbar-top]

Recent Post