Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சீனாவில் நிலநடுக்கம்:50-க்கும் மேற்ப்பட்டோர் பேர் பலி (படங்கள் இணைப்பு)

சீனாவில் அடுத்தடுத்து ஏற்ப்பட்ட நிலநடுக்கத்தில் 50 பேர் பலி மற்றும் ஆயிரக்கணக்கில் வீடுகள் இடிந்து தரைமட்டமாகியது.

சீனாவில் இன்று காலை 11.20 மணியளவில் தென்கிழக்கு பகுதியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது.யுனான் மற்றும் ஜிஹிஹு பதிகளில் 14 கி.மீ ஆழத்தில் இது மையம் கொண்டிருந்தது.மேலும் இது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிந்துள்ளதாக சீனா நில நடுக்க மையம்(CNCE) அறிவித்துள்ளது.

இந்த தொடர் நிலநடுக்கத்தால் ஆயிரத்திற்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 50 க்கும் மேற்ப்பட்டோர் பலியானதாகவும் 150 க்கும் மேற்ப்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.மேலும் மக்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது.

ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.





நன்றி - செய்தியாளர் பிரசாந்த்
[vuukle-powerbar-top]

Recent Post