Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 56 பேர் உயிரிழப்பு (அண்மைய தகவல்)

NEWS UPDATE @ 7.15 PM :

சிவகாசி பட்டாசு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

NEWS UPDATE @ 6.30 PM :

சிவகாசி பட்டாசு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 56 ஆக உயர்ந்துள்ளது…
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நாளை முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் சந்திக்க உள்ளதால், நாளைய தலைமை செயலக பணிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

NEWS UPDATE @ 5.30 PM :

சிவகாசி பட்டாசு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 54 ஆக உயர்ந்துள்ளது…

விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா நிவாரண உதவி அறிவிப்பு

NEWS UPDATE @ 4.45 PM :
சிவகாசி பட்டாசு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 53 ஆக உயர்ந்துள்ளது…

NEWS UPDATE @ 4.30 PM :

சிவகாசி பட்டாசு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது…
விபத்து நடந்த இடத்திற்கு அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் விரைகின்றனர்..
முதலமைச்சர் ஜெயலலிதா நாளை விபத்து நிகழ்ந்த இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற உள்ளதாக தகவல்..

NEWS UPDATE @ 4 PM :

சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 45 பேர் உடல் கருகி பலியாகினர், பலர் படுகாயமடைந்துள்ளனர். விருதுநகர் மருத்துவமனையில் 15 உடல்களும், சிவகாசி மருத்துவமனையில் 17 உடல்களும், சாத்தூரில் 13 உடல்களும் உறவினர்கள் அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டுள்ளன. பட்டாசு விபத்து குறித்த அவசர உதவிக்கு 0452-2532535 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

NEWS UPDATE @ 2 PM:

பலி வாங்கிய பட்டாசு : சிவகாசியில் இருந்து 7 கி.மீ., தொலைவில் இருக்கிறது முதலிப்பட்டி. இங்கு இருக்கும் ஓம் சக்தி பட்டாசு ஆலையில் இன்று காலையில் திடீர் என வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 45 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். இதுவரை 50 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மதுரை, சிவகாசி, விருதுநகர் அரசு பொது மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 50க்கும் மேற்பட்டோர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கின்றது.
[vuukle-powerbar-top]

Recent Post