Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இன்று வி.ஏ.ஓ தேர்வு: 5,400 மையங்களில் நடைபெறுகிறது

கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெறுகிறது. ஆயிரத்து 870 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான இந்த தேர்வு குறித்த அறிவிப்பை கடந்த ஜூலை மாதம் 10ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இத்தேர்வுக்கு சுமார் 10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 

இந்த தேர்வு தமிழகத்தின் 5 ஆயிரத்து 400 தேர்வு மையங்களில் இன்று நடைபெறுகிறது. இதில் சுமார் 500 மையங்கள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளதால், அங்கு வெப்-கேமரா மூலம் அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நட்ராஜ் தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post