Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 68 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 68 பேரை காவல்துறை கைது செய்தனர். முதலிபட்டியில் கடந்த 5-ம் தேதி நடந்த வெடிவிபத்தைத் தொடர்ந்து பட்டாசுத் தொழிற்சாலைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் வெம்பக் கோட்டை அருகே குகன்பாறை என்ற இடத்தில் செயல்பட்டு வந்த கார்த்திக் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு தொழிற்சாலையின் உரிமத்தை அதிகாரிகள் சில நாள்களுக்கு முன் ரத்து செய்தனர். 

இந்த நிலையில், அந்தத் தொழிற்சாலையில் வேலைபார்த்த சிலர், காட்டுப் பகுதியில் கூடாரம் அமைத்து ஆபத்தான முறையில் ஃபேன்சி ரக பட்டாசுகளை தயாரித்து வந்துள்ளனர். 

தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் அந்தப் பகுதியில் ரோந்து சென்றபோது, அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து, பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்த 39 பெண்கள் உள்ளிட்ட 68 பேரை போலீஸார் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
[vuukle-powerbar-top]

Recent Post