Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முதன் முறையாக "6 பாக்ஸ்" கட்டமைப்புடன் தோன்றும் விக்ரம்.


விக்ரம் தன்னுடைய சினிமா வாழக்கையில் முதன்முறையாக, "6 பாக்ஸ்" எனப்படும் உடல் கட்டமைப்புடன் அவர் நடித்து இன்றைய தினம் வெளியாகும் "தாண்டவம்" படத்தின் ஒரு காட்சியில் தோன்றவுள்ளார்.

அவரது இரசிகர்களின் ஆசையை தீர்த்து வைக்கும் நோக்கத்தோடு மிக கடுமையான உடற்பயிற்சி  மேற்கொண்டு இவ்வாறானதொரு உடல்  கட்டமைப்பை அவர் பெற்றுள்ளார்.

இவ்வாறானதொரு உடல் கட்டமைப்பை பெறுவதற்கு நடிகர் சூர்யாவிற்கு ஆலோசகராக இருந்த அல்காஷ் ஜோசெப் அவர்களே நடிகர் விக்ரமிற்கும் ஆலோசகராக இருந்துள்ளார்.

விக்ரமின் 100 சதவீத உழைப்பைக் கண்டு, அவரது ஆலோசகர் வியந்ததாகவும்,இதன்மூலமாகவே மிக கூடிய விரைவில் இவ்வாறானதொரு  உடல் கட்டமைப்பை அவர் பெறுவதற்கு காரணமாக அமைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தாண்டவம்" படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றபோது அவரது ஆலோசகரும் உடன் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

"தாண்டவம்" பட வெளியீட்டு நிகழ்வின் போது,படத்தின் விநியோகஸ்தர்களால் மேற்படி விக்ரமின் திறந்த உடல் கட்டமைப்புடன் கூடிய புகைப்படம் ஊடகங்களுக்கு காண்பிக்கப்பட்டதை அடுத்து, இப்படத்திற்கான ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது.

[vuukle-powerbar-top]

Recent Post