Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மக்களுக்கு சுமை : சமையல் எரிவாயு ரூ 75 உயர இருக்கிறது


பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சமையல் எரிவாயு (கியாஸ்) சிலிண்டர் விலையும் உயருகிறது. நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிந்த பிறகு விலை உயர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. . 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை ஏற்றத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்றாலும் இந்தியாவில் எண்ணை நிறுவனங்கள் இழப்பை சந்தித்து வருகின்றது. இதனால் பெட்ரோலிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியற்றின் விலையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி டீசல் இதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 4 முதல் ரூ.5 வரை உயர்த்தப்படலாம் என்றும், டீசல் ரூ.5 உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. 

மேலும் சமையல் எரிவாயு  சிலிண்டர் ரூ.75 முதல் ரூ.100 வரை உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இதேபோல மண்எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்ததும் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

சமீபகாலங்களில் பெட்ரோல் டீசல் விலை அவ்வப்போது உயர்த்தப்பட்டாலும் சமையல் எரிவாயு  விலை கடைசியாக 2011ம் ஆண்டு ஜூன் மாதம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் சமையல் கேஸ் மற்றும் மண்ணெண்ணெய் விலை தற்போது உயர்த்தப்பட இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

[vuukle-powerbar-top]

Recent Post