Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 77பேர் இலங்கை கடற்படையினரால் கைது

அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 77பேரை இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

'
நிர்மணி' என்ற படகு மூலம் பயணிக்க முயன்ற இந்த 77பேரில் 61 தமிழர்கள், 14 சிங்களவர்கள் இரு முஸ்லிம்கள் அடங்குவதோடு, பெண்ணொருவரும் அவரது கைக்குழந்தையும் இக்குழுவில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, புத்தளம், கொழும்பு, உடப்பு, மன்னார், சிலாபம் மற்றும் கற்பிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இவர்கள், மோதர துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டு பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[vuukle-powerbar-top]

Recent Post