Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தொடரும் கிரனைட் முறைகேடு 8 பேர் மீது வழக்கு பதிவு

மதுரை அருகே சீல் வைக்கப்பட்ட பிஆர்பி நிறுவனத்தின் கிரனைட் சேமிப்புக் கிடங்கில் அத்துமீறி நுழைந்ததாக 8 ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மதுரை மாவட்டம் சேந்தலைப்படடியில், சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அந்த சேமிப்புக் கிடங்கு, அனுமதியின்றி கிரனைட் கற்கள் சேமித்து வைக்கப்பட்டதாக நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியரால் சீல் வைக்கப்பட்டது. 

ஆனால், தடையை மீறி இரவு நேரத்தில் பிஆர்பி நிறுவன ஊழியர்கள், கிரனைட் சேமிப்புக் கிடங்கிற்கு வந்து செல்வதாக தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக ஒருவரை கைது செய்துள்ள காவல்துறையினர், 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

இதனிடையே, கிரனைட் முறைகேடு வழக்கில் சிக்கியுள்ள பிஆர்பி நிறுவனத்தின் உரிமையாளர் பழனிச்சாமி மதுரை நீதிமன்றத்தில் இன்று ஆஜப்படுத்தப்பட உள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post