Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சமாசத்திடம் ஒரு கோடியே 80 இலட்சம் ரூபா பணத்தினை ஏப்பம் விட்ட இலங்கை இராணுவம்


முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சமாசத்திடம் இருந்த ஒரு கோடியே 80 இலட்சம் ரூபா பணத்தினை இலங்கை இராணுவத்தினர் திண்டு ஏப்பம் விட்டுள்ளனர்.

இலங்கை இராணுவத்தின் ஆட்சியின் கீழ் இயங்கிவம் குறித்த முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சமாசத்தில் உள்ள உறுப்பினர்களும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.

இவ்விடையம் தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் மாவட்டக் கடற்றொழிலாளர்கள் கேள்வி எழுப்பிய போது அக்கேள்விக்குப் பதில் கூற முடியாமல் திணைக்கள அதிகாரிகள் திக்குமுக்காடி வருவதாகவும் மேலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இவ்விடையம் தொடர்பாக மேலும் தெரியவருவது,

முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சங்கத்தில் விடுதலைப் புலிகள் காலத்தில் அங்கத்தவர்களாக இருந்தவர்களை மிரட்டி கலைத்துவிட்டு தற்போது இலங்கை இராணுவத்தின் உதவியுடன் புதிய சங்க உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் படைப்புலானாய்வாளர்களும் ஊடுருவியுள்ளனர்.

இராணுவத்தினர் பொது மக்களை உயிர் அச்சுறுத்தி தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவர்களைக் கொண்டு இலங்கை இராணுவம் சிங்களவர்களை அப்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட வைத்துள்ளது.

இதுமட்டுமல்லாமல் கடலில் பிடிக்கப்படும் கடல் உணவின் பெரும்பகுதி தென்பகுதிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சங்கத்திடம் இருந்த ஒரு இலட்சத்தி 80 ஆயிரம் ரூபா பணத்திற்கும் கணக்கே இல்லாமல் போயுள்ளது என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post