Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பேருந்து தொடருந்து மோதலில் பீகாரில் 8 மாணவர்கள் பலி

பீஹார் மாநிலம் சிவான் மாவட்டத்தில், லெவல் கிராசிங்கைக் கடக்க முயன்ற கல்லூரிப் பேருந்து மீது அந்த வழியாகச் சென்ற விரைவு ரயில் மோதியதில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹவுரா – காத்கோடம் விரைவு ரயில் சென்ற போது, தனியார் பொறியியல் கல்லூரிப் பேருந்து அப்பகுதியில் உள்ள லெவல் கிராசிங்கைக் கடக்க முயன்றதால் இந்தக் கோரவிபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள், ரயில் மீது கற்களை வீசித் தாக்கியதுடன் ரயில் பெட்டிகளுக்கும் தீவைத்தனர். காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி, அங்கிருந்து கலைந்து போகச்செய்தனர்

விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என ரயில்வே அமைச்சர் ஜோஷி அறிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post