Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அக்டோபர் 8 - கூடங்குளம் அணுமின் நிலையம் கடல் வழியே முற்றுகை. உதயகுமார் அறிவிப்பு


அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவின் அறிவிப்பு வருமாறு 

இடிந்தகரை செப்டம்பர் 28, 2012

காவல்துறையை உடனே பின்வாங்கு, சிறையிலிருப்போரை விடுதலை செய், பொய் வழக்குகளை ரத்து செய், யுரேனியம் நிரப்புவதை நிறுத்து, அணுமின் நிலையத்தை மூடு எனும் நமது கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாதபட்சத்தில் எதிர்வரும் அக்டோபர் 8 அன்று காலை 10 மணிக்கு கடல் வழியாக கூடங்குளம் அணுமின் நிலையத்தை 500 மீட்டர் தூரத்தில் முற்றுகை இடுவது என்று தீர்மானித்திருக்கிறோம். இந்தப் போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்து தங்கள் படகுகளில் பெருந்திரளாக வந்து கலந்து கொள்ளும்படி அன்புடன் வேண்டிக் கொள்கிறோம். தங்களுக்கு வேண்டிய உணவு, தண்ணீர், மருத்துவ, கழிப்பிட ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 

அன்புடன், 
போராட்டக் குழு 
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
[vuukle-powerbar-top]

Recent Post