Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காவிரி நீரை திறந்தது கர்நாடகா: தினமும் 9 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

பிரதமரின் உத்தரவுப்படி கர்நாடக அரசு காவிரியில் தினமும் விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடிநீரைத் திறந்து விட தொடங்கியுள்ளது.

நேற்று இரவு இதற்கான உத்தரவை கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் பிறப்பித்துள்ளார். இதனையடுத்து, கிருஷ்ணராஜசாகர் அணையின் பத்து மதகுகளில் இருந்தும் நீர் விடுவிக்கப்பட்டது.

நேற்று மாலை மாநில நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையுடன் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற ஷெட்டர், பிரதமரின் உத்தரவு குறித்து ஆளுநர் பரத்வாஜ் உடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, பிரதமரின் உத்தரவை கர்நாடக அரசு உதாசீனப்படுத்தியதற்கு, உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருப்பதால், தமிழகத்திற்கு உரிய நீரை திறப்பது குறித்து பரிசீலிக்குமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

கடந்த 19 ஆம் தேதி நடந்த காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தில், அதன் தலைவரான பிரதமர் மன்மோகன் சிங், தமிழகத்திற்கு விநாடிக்கு 9 ஆயிரம் கன அடி நீரைத் திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிட்டார். ஆனால், இந்த உத்தரவை ஏற்கமறுத்து ஜெகதீஷ் ஷெட்டர் வெளிநடப்பு செய்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post