Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினை: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்!

திருவையாற்றில் பாயும் காவிரி ஆற்றின் படம்
தமிழகத்துக்கு காவிரி நதிநீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்திரவிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் இன்று புதிய மனு தாக்கல் செய்துள்ளது.

கடந்த 19ம் திகதி பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் கூடியபோது, தமிழகத்துக்கு தண்ணீர் தினமும் 2 டிஎம்சி தண்ணீர் வீதம் திறந்து விட வேண்டும் என்று தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டார். 

தண்ணீர் தரமுடியாது என கர்நாடக முதல்வர் மறுக்கவே, அக்டோபர் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் பருவ மழை தொடங்கிவிடும். அதுவரை ஒரு டிஎம்சி தண்ணீராவது விடவேண்டும் என்று தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டபோதும் ஜகதீஷ் ஷட்டர் மறுத்துவிட்டார். மேலும் பிரதமர் மன்மோகன் சிங், தினமும் வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டதையும் ஜகதீஷ் ஷட்டர் மதிக்கவில்லை..

இதை எல்லாம் புதிய மனுவில் சுட்டிக் காட்டி இருக்கும் தமிழக அரசு, தமிழக விவசாயிகளைக் காப்பாற்ற சம்பா பயிருக்கு 24 நாட்களுக்கு 2 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்திரவு இடவேண்டும் என்றும், மேலும் வறட்சி காலங்களில் நீரைப் பகிர்ந்து கொள்ள 2009 ஆண்டின் திட்டத்தின் படி தமிழகத்துக்கு நீர் வழங்க உத்திரவிடே வேண்டும் என்று பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையத்துக்கும் உத்திரவிட வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இத மனுவின் மீதான விசாரணை எதிர்வரும் வெள்ளிக்கிழமை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post