Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போரால் அகதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: ஐ.நா., எச்சரிக்கை!

அதிகரித்து வரும் அகதிகள்: ஒரு சர்வதேச பிரச்சினை!
சிரியாவில் அரசுப் படையினருக்கும் புரட்சிப்படையினருக்கும் இடையே நடைபெற்று வரும் உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என ஐ.நா. எச்சரித்துள்ளது. 

மக்கள் போரினால் அவதிப்படுவது குறித்து ஐ.நா மற்றும் மனித உரிமை அமைப்பினர் கூறியதாவது:- 

இதுவரை சுமார் 3 லட்சம் பேர் அகதிகளாக பக்கத்து நாடுகளான துருக்கி, லெபனான் மற்றும் ஜோர்டானுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, உடை மற்றும் உறைவிட வசதிகள் செய்வதற்கு உதவி வேண்டி மனித உரிமை அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. தினந்தோறும் குழந்தை மற்றும் மூட்டை முடிச்சுகளுடன் சுமார் 3,000 பேர் அகதிகளாக வெளியேறி வருகின்றனர். சண்டை உச்சக்கட்டம் அடைந்து வரும் நிலையில், இந்த எண்ணிக்கை அதிகரித்து இந்த வருட இறுதியில் அகதிகள் எண்ணிக்கை 7 லட்சமாக உயரும் என எச்சரிக்கிறோம். 

இவ்வாறு அவர்கள் கூறினர். 

சிரியாவில் புதன்கிழமை நடந்த சண்டையில் மட்டும் 305-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். கடந்த 18 மாதங்களாக நடைபெற்று வரும் போரில் இது மிக மோசமான நாள் என்று பிரிட்டனை சேர்ந்த சமூக நல அமைப்பினர் தெரிவித்துள்ளனர். அங்கு இறந்து கிடப்போரின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இதுவரை நடைபெற்ற போரில் 2,70,000 பேர் இறந்துள்ளனர் எனவும் அப்பகுதியில் பணியாற்றும் சமூக நல அமைப்பினர் தெரிவித்தனர்.
[vuukle-powerbar-top]

Recent Post