Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

திருமணம் செய்து ஏமாற்றிய கேரள அழகியின் பரபரப்பு வாக்குமூலம்!

பல வாலிபர்களுடன், நெருக்கமாக பழகி, அவர்களை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி, நகை, பணத்துடன் மாயமான, கேரள அழகி சகானாஸ், நேற்று பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். தற்போது, ஆறு மாத கர்ப்பிணியாக உள்ள அவரின் குழந்தைக்கு, தந்தை யார் என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலம், பத்தனம் திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர், ஷானு வேல் என்ற சகானாஸ், 25. சென்னை உட்பட, பல இடங்களில், ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக பழகி, அவர்களை ஏமாற்றி, நகை மற்றும் பணத்துடன், இவர் மாயமானதாக, சென்னை மாநகர போலீசில், ஏராளமானவர்கள் புகார் செய்தனர்.

அடையாறு உதவி கமிஷனர் மோகன்ராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார், பாதிக்கப்பட்ட வாலிபர்களை, நேரில் அழைத்து விசாரித்தனர்.

அதில், புளியந்தோப்பைச் சேர்ந்த பிரசன்னா என்ற வாலிபருடன் மட்டும், சகானாஸ் அலைபேசியில், தொடர்ந்து பேசி வந்த விவரம் தெரிய வந்தது. ஒரு கட்டத்தில், அலைபேசியில் பேச, பணம் இல்லாமல் தவித்த சகானாசின் அலைபேசிக்கு, சென்னையில் இருந்த பிரசன்னா, "இ - ரீசார்ஜ்' மூலம் பணத்தைச் செலுத்தினார்.அலைபேசி கோபுரம் மூலமாக, அவர் பெங்களூருவில் மறைந்திருப்பது, போலீசாருக்கு தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார், அவரது அலைபேசி இயங்கிய பகுதியில் உள்ள விடுதிகளில் விசாரித்தனர். அப்போது, பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் நின்றிருந்த சகானாசை, நேற்று முன்தினம் இரவு, போலீசார் கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர்.

சகானாஸ், போலீசாருக்கு அளித்த பரபரப்பு வாக்குமூலத்தின் முழு விவரம்: கேரள மாநிலம், பத்தனம் திட்டா மாவட்டம், கலஞ்சூர் போஸ்ட், புத்தன் வீடு என்ற பகுதியில், வசித்து வந்தேன். என் தாயின் நடத்தை சரியில்லாததால், தந்தை இஸ்மாயில் எங்களை விட்டு விலகினார். நான், 10ம் வகுப்பு படித்த போது, கேரளாவைச் சேர்ந்த சித்திக் என்பவருடன், திருமணம் நடந்தது. படிப்பை தொடர்ந்து, பிளஸ் 2 முடித்தேன். அதன்பின், சித்திக் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தேன். சித்திக்குடன் குடும்பம் நடத்தியதில், ஒரு பெண் குழந்தை பிறந்தது; அக்குழந்தைக்கு தற்போது, 10 வயது ஆகிறது.சித்திக்கை பிரிந்து, அனாதையாக இருந்த நான், கேராளாவில் உள்ள துணிக் கடையில், வேலை செய்தேன்.

 2005ம் ஆண்டு, பத்திரிகை விளம்பரத்தைப் பார்த்து, சென்னை வேப்பேரியில் உள்ள, சம்சுதீன் என்பவரின் சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சேர்ந்தேன்.விழா ஒன்றில், சினிமா இணை இயக்குனர் ராகுல் என்பவருடன், பழக்கம் ஏற்பட்டது. சினிமா நடிகை போல் இருப்பதாகக் கூறிய ராகுல், என்னை சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறினார். அதனால், சூப்பர் மார்க்கெட் வேலையை உதறி விட்டு ராகுலுடன் சுற்றினேன். 

தனது காதல் மொழிக்கு மயங்கி, ஏமாந்தவர்கள் குறித்து, போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், சகானாஸ் தெரிவித்த பட்டியல்:

*அலைபேசி விற்பனை நிறுவனத்தில் வேலை பார்த்த, அடையாறைச் சேர்ந்த சரவணனுடன், போனில் பேசி, அவரை காதலிப்பதாகக் கூறினேன். வெறும் கழுத்துடன் இருப்பதால், தோழியின் திருமணத்திற்கு செல்ல வேண்டுமென கூறி, அவரிடம் இருந்த, இரண்டு சவரன் செயினை வாங்கிச் சென்றேன்; அத்துடன் அவரை, "கட்' செய்து விட்டேன்.

*திருவொற்றியூரில் அலுமினிய பேக்டரியில் வேலை செய்து வந்த சரவணனுடன் பழகி, வழக்கறிஞர் படிப்புக்கு உதவி செய்யுமாறு கேட்டேன். என் பேச்சை முழுமையாக நம்பிய அவர், 1.50 லட்ச ரூபாய் வரை கொடுத்தார். ஒரு கட்டத்தில், வழக்கறிஞராக உள்ள அவரது நண்பர் மூலம், பார் கவுன்சிலில் விசாரித்து, உண்மையை தெரிந்து கொண்டார்.

*புளியந்தோப்பைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை, திருமணம் செய்து குடும்பம் நடத்தினேன்.

*சுரேஷ் வீட்டிற்கு, இரண்டு தெரு தள்ளி, எனக்கு முன்பே அறிமுகமான, பிரசன்னா வசித்து வந்தார். அவரை ஒரு நாள் மடக்கி, என் கையில் கீறி ரத்தம் வர வைத்தேன்; அதை பார்த்த பிரசன்னா பயந்து விட்டார். அவரிடம், "என்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால், தற்கொலை செய்து கொள்வேன்' என, மிரட்டினேன். அவர் மீது, உண்மையான அன்பு வைத்திருப்பதாக நினைத்த பிரசன்னா, என்னை, திருவள்ளூரில் உள்ள ஒருகோவிலில், திருமணம் செய்து கொண்டார்.

*அதன்பின், போரூர், முகலிவாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டனை, திருமணம் செய்து கொண்டேன். அவருடன், சில மாதங்கள் குடும்ப நடத்தினேன். ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு படிக்க விரும்புவதாகக் கூறி, சைதாப்பேட்டையில் உள்ள மகளிர் விடுதியில் தங்கினேன். பின், அங்கிருந்து வேறு இடத்துக்கு மாறிவிட்டேன்.

*தி.நகர் ரங்கநாதன் தெருவிற்கு சென்ற போது, பிளாட்பாரத்தில், துணி வியாபாரம் செய்து கொண்டிருந்த, ராஜா என்பவருடன் நெருக்கமாக பழகினேன். அனாதை குழந்தைகளுக்கு, துணி மற்றும் அன்பளிப்பு பொருட்கள் கொடுக்க வேண்டுமென கூறி, அவரை ஏமாற்றி பணத்தைக் கறந்தேன்.
[vuukle-powerbar-top]

Recent Post