Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இன்னும் ஆறே மாதங்களில் காங்கிரஸ் அரசு கவிழும் என்கிறார் மம்தா: காங்கிரசுக்கு நெருக்கடி?

ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த வந்த ஆதரவை திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி திரும்பப் பெற்றார்.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை மத்திய அரசு அனுமதித்தது. சமையல் எரிவாயுக்கு கட்டுப்பாடு விதித்தது, டீசல் விலை உயர்வு ஆகிய மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மம்தா பானர்ஜி இந்த முடிவை எடுத்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.


"எங்கள் கட்சி கொள்கைப்பிடிப்பு உடையது. மத்திய அரசின் மக்கள் விரோதமுடிவுகளை எதிர்த்து நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்துவோம்.இந்த அரசு இன்னும் 3 முதல் 6 மாதங்களுக்குள் கவிழ்ந்துவிடும். அப்படிமத்திய அரசு கவிழ்ந்து திடீர் தேர்தல் வந்தால் நாங்கள் அதற்கு பொறுப்பாக முடியாது" என்றும் மம்தா கூறியுள்ளார். 
[vuukle-powerbar-top]

Recent Post